Monday, April 18, 2011


கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி
கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்

(காப்பியடிச்சது தாங்கோ)

No comments:

Post a Comment